×

டெங்கு விழிப்புணர்வுக்கு ஊராட்சி செயலர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்

திருத்தணி, அக். 15:திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், டெங்கு குறித்தான விழிப்புணர்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு வரவேற்றார். இதில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் பங்கேற்று பேசியதாவது: ஊராட்சிகளில் பரவும் மர்ம காய்ச்சல் தடுப்பதற்கு சுகாதார துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பெரும்பாலான ஊராட்சிகளில் எங்கள் பணியாளர்கள் செல்லும் இடங்களில் கிராமமக்கள் சரியான ஒத்துழைப்பு தருவதில்லை. இதுபோன்ற நேரத்தில் அந்தந்த ஊராட்சி செயலர்கள் களத்தில் இருந்தால் கொசு ஒழிப்பு பணிகளை முழுமையாக செய்ய முடியும். மேலும், டெங்கு குறித்தான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த முடியும். மேலும், பம்ப் ஆப்ரேட்டர் கள் தினமும் குளோரின் கலந்த குடிநீரை தெருக் குழாய்களில் வினியோகம் செய்ய வேண்டும். மாதத்தில் இரு முறை குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடரால் தூய்மைப்படுத்திய பின் தண்ணீரை ஏற்ற வேண்டும்.

குறிப்பாக ஊராட்சி செயலர்கள் அந்தந்த கிராமங்களுக்கு சென்று, மக்கள் இடையே காய்ச்சல் வருவதற்காக அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளை சுற்றியும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்களும் மருத்துவ முகாம்கள் நடத்தி காய்ச்சலை கட்டுப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், வட்டார கல்வி அலுவலர்கள் பாபு, வெங்கடேஸ்வரலு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திவ்யஸ்ரீ, மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, வருவாய் துறை, வேளாண் துறை, அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள் உள்பட ஒன்றிய அலுவலர்கள் என, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Panchayat Secretaries ,
× RELATED தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்...