×

கோமாரிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

திருவள்ளூர், அக். 15: திருவள்ளுர் அடுத்த பட்டரைபெரும்புதூரில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோமாரி நோய்த் தடுப்பூசி மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்  நவம்பர் 3ம்  தேதி வரை  நடைபெற உள்ளது.  இம்மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் உள்ள, 5 கால்நடை மருத்துவமனைகள், 87 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் முகாம்கள் நடத்த, கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோரைக் கொண்ட 76 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதில், ,கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் எம்.ராஜேந்திரன், துணை இயக்குநர் பி.ஜெயந்தி, துணைப் பதிவாளர் சந்திரசேகர், உதவி இயக்குநர்கள் வெங்கட்ரமணன், பரணிலட்சுமி உட்பட கால்நடை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : camp ,
× RELATED மருத்துவ முகாம்