×

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாஸ் கிளீனிங் திட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும்

திருவள்ளூர், அக். 15: டெங்கு காய்ச்சல் பரவிவருவதை தடுக்க மாஸ் கிளீனிங் திட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் குழந்தைகளை, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் பரவியபோது, பள்ளிகளில் வியாழன்தோறும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அரசுப்பள்ளிகள் மட்டுமல்லாமல், அனைத்து வகை பள்ளிகளும் இதை பின்பற்றின. தொடர் விடுப்பு எடுப்போர் பட்டியல் திரட்டி சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டது.

டெங்கு தீவிரமாக பரவிய பின், மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகளால் மாணவர்களின் காய்ச்சல் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர சிரமம் ஏற்பட்டது. எனவே, நடப்பாண்டில் ‘’மாஸ் கிளீனிங்’’திட்டத்தை தற்போதே பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், பகலில் கடிக்கும் ‘ஏடிஸ்’ கொசுவால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை பள்ளிகளில் கழிப்பதால், பள்ளி வளாகம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க உத்தரவிட வேண்டும். தொடர் தூய்மைப் பணிகளால் மட்டுமே கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடியும். கடந்தாண்டை போல, குறிப்பிட்ட வார நாளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனர்.

Tags : schools ,spread ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...