×

வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தபணி தேதி நீட்டிப்பு

புதுச்சேரி, அக். 15:  புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் செயல் திட்டம் கடந்த செப்.1ம் தேதி முதல் இன்று (15ம் தேதி) வரை செயல்படுத்த ஆணையிட்டு இருந்தது. இந்த திட்டத்தின்படி வாக்காளர்களே வாக்காளர் பட்டியலிலுள்ள தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்பட மாற்றம் போன்ற விவரங்களை சரிபார்த்து கொள்ள பல வழிவகை செய்யப்பட்டது. ஆனால் பல வாக்காளர்கள் இந்த சிறப்பு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பதாலும், சேர்த்தல், நீக்கல், திருத்தல் போன்ற பணிகளுக்கு பெறப்பட்ட படிவங்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் முடிக்க வேண்டியுள்ளதாலும், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் செயல் திட்டத்தின் காலத்தையும் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்த பணியின் காலத்தையும் கீழ்கண்டவாறு நீட்டித்துள்ளது.

 அதன்படி, வாக்காளர் சரிபார்க்கும் செயல் திட்டம் மற்றும் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்த பணிக்கு முன்பாக செய்யப்பட வேண்டிய பணிகள் நவ.18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ.25ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நவ.25ம் தேதி முதல் டிச.24ம் தேதி வரை உரிமை கோரிக்கைகள், ஆட்சேபனைகள், வாக்குச்சாவடிகளிலோ அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திலோ தாக்கல் செய்யலாம். 2020ம் ஆண்டு ஜன.10ம் தேதி நீக்கல் மற்றும் சேர்த்தலுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்வதற்கான காலம் முடிடையும். ஜன.17ம் தேதி துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிக்கான காலம் முடிவடையும். ஜன.20ம் தேதி வாக்காளர் பட்டியல் இறுதியாக வெளியிடப்படும். மேலும் வாக்குச்சாவடி நிலைய அதிகாரி ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளரின் விவரங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கூறிய வாக்குச்சாவடி நிலைய அதிகாரிக்கு ஒத்துழைத்து தங்கள் விவரத்தை சரிபார்க்க ஏதுவாக ஏதேனும் ஒரு ஆவணத்தை (பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார்  அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், அரசு வழங்கிய அடையாள அட்டை, குடிநீர், மின்சார கட்டண ரசீது, விவசாய அடையாள அட்டை அல்லது
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆணை) காண்பிக்குமாறும், பிழையிருந்தால் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...