×

புல்லரம்பாக்கத்தில் ஷிப்ட் முறையில் ஏரி மணல் திருட்டு

திருவள்ளூர், அக்.15:  திருவள்ளூர் புல்லரம்பாக்கம் ஏரியில் இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் திருட்டு நடைபெறுகிறது. இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தால், சம்பந்தப்பட்ட பகுதி புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்குள் வருகிறது எனவும் புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தால் டவுன் போலீஸ் நிலையத்துக்குள் வருகிறது எனவும் காரணம் கூறி யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிகிறது. இதனால் புல்லரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “புல்லரம்பாக்கம் ஏரியில் இரவில் மட்டும் மணல் கடத்தல் நடந்தது. இப்போது ஷிப்ட் முறையில் மணல் கடத்தப்படுகிறது. ஏரியில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும்போது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மணல் திருட்டு பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து புல்லரம்பாக்கம் ஏரியில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...