×

டாக்டரின் மூக்கை உடைத்தவர் கைது

வேளச்சேரி, அக். 15: சாஸ்திரி நகரில் தனியார்  மருத்துவமனை டாக்டரை  தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெசன்ட் நகர் வண்ணான் துறையை சேர்ந்தவர் லோகேஷ் (7). இவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காட்டியுள்ளார். அப்போது, மருத்துவர் ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பி உள்ளனர். இரவு மீண்டும் அலர்ஜி அதிகமாகியுள்ளது. இதனால், மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, சரவணன் தம்பி மதன்ராஜ் (29). இவரது நண்பர் தர்மா (30) ஆகியோர் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த மருத்துவர் யுவராஜ் (24) என்பவரிடம் தவறான சிகிச்சையால் தான் மீண்டும் அலர்ஜி அதிகமாகி உள்ளது என வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, அவர்கள் மூவரும் சேர்ந்து மருத்துவரின் மூக்கை உடைத்து உள்ளனர். மேலும், தடுக்க வந்த ஊழியர் பத்மினி (27) என்பவரை தாக்கி உள்ளனர். இதுகுறித்து மருத்துவர் யுவராஜ் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சரவணன், தர்மா ஆகிய இருவரை தேடி வருகிறார்கள்.  மருத்துவரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : doctor ,
× RELATED சாலை விபத்தில் மருத்துவர் பலி