×

பாலசுப்ரமணியர் ஆலயத்தில் லட்ச தீப விழா

உத்திரமேரூர், அக். 15: உத்திரமேரூர் பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் நேற்று லட்ச தீப விழா வெகு விமரிசையாக நடந்தது.  விழாவையொட்டி ஸ்ரீபாலசுப்பரமணியருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் விசேஷ பூஜைகள் முடிந்த பின் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வள்ளி தெய்வானையுடன் பாலசுப்ரமணியர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மாலை கோவில் வளாகம் மற்றும் கோயிலை சுற்றிலும்  பக்தர்கள் அகல் மற்றும் எலுமிச்சை உள்ளிட்டவைகளில் நெய்தீபங்கள் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். விளக்குகளின் தீப ஒளியில் கோயில் ரம்மியமாக காட்சியளித்தது. பின்னர் வெள்ளி ரதத்தில் சுவாமி வலம் வந்தார்.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் ஆன்மித கர்நாடக இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Laksha Deepa Ceremony ,Balasubramanian Temple ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் நாளை புதுமையான...