×

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி, அக். 15: நாடு முழுவதும் வருகிற 27ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்
படுகிறது. இதையொட்டி சுவீட்ஸ் ஸ்டால்களில் இனிப்பு, பலகாரம் விற்பனை முன்பதிவு சூடுபிடித்துள்ளது. சுவீட் மற்றும் கார வகைகள் தயாரித்து அவற்றை பேக்கிங் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள சுவீட் ஸ்டால்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தன்ராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உணவு வகைகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பேக்கிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

 மொத்தம் 5 கடைகளிலும், தென்னஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலிலும் ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கிருந்து இனிப்பு வகைகளில் சிலவற்றை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது, தரமற்ற உணவு பொருட்களை நுகர்வோருக்கு விநியோகிக்கக் கூடாது என உரிமையாளர்களை எச்சரித்தனர். இதுகுறித்து தன்ராஜ் கூறுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகை உணவுகள் தயாரிப்பு பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதில் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் பஸ் நிலையத்தில் முதல்கட்டமாக ஆய்வு மேற்கொண்டோம். அங்கிருந்து சில மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துள்ளோம். மற்ற இடங்களிலும் இந்த சோதனை தொடரும்
என்றார்.

Tags : Food safety officials ,
× RELATED சிக்கன் பப்சில் கிடந்த பல்லி: அதிரடி...