×

மின்விளக்கு வசதியில்லாததால் பெண்கள், மாணவிகள் அச்சம்

விழுப்புரம், அக். 15: விழுப்புரம் அருகே மின்விளக்கு வசதியில்லாததால் பெண்கள், மாணவிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் அருகே ப.வில்லியனூரை சேர்ந்த சரவணன் மற்றும் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பஞ்சமாதேவி ஊராட்சிக்குட்பட்ட ப.வில்லியனூர் வாணியம்பாயைளம் பாதை உள்ளது. இதில் தினமும் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் சென்றுவருகின்றனர். தினமும் 2 கி.மீ தூரம் சென்றுவரும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பஸ்வசதியில்லை. மேலும் இரவில் மின்விளக்கு வசதியில்லாததால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும்நிலை உள்ளது. சாலையின் இருபுறமும் முட்புதர்கள் இருப்பதால் பெண்கள், மாணவிகள் நடந்துசெல்ல அச்சப்படுகின்றனர். மின்விளக்கு வசதிக்கோரி பலமுறை ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதியில் மின்விளக்கு, பேருந்துவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென. அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags : Women ,lighting facilities ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...