×

2வது கட்டமாக குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

விழுப்புரம்,  அக். 15:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு 2வது கட்டமாக கணினி மூலம்  குலுக்கல்முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.விக்கிரவாண்டி  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்காக 275  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தலையொட்டி க்குச்சாவடி  வாரியாக அனுப்பப்பட வேண்டிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல்  ஆணையத்தின் உத்தரவின்படி கணினி மூலம் குலுக்கல் முறையில் இரண்டாவது கட்டமாக  ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர்  சுப்ரமணியன், பொதுபார்வையாளர் சீனுவீரபத்ருடு ஆகியோர் தலைமையில்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின்  ஏஜெண்டுகள் முன்னிலையில் நடந்தது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கு  தேவையான 344 மின்னணு வாக்குப்பதிவு மற்றும் 344 மின்னணு வாக்கு எண்ணிக்கை,  358 விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை கணினி மூலம் குலுக்கல் செய்யப்பட்டு 275  வாக்குச்சாவடிகள் வாரியாக ஒதுக்கீடுசெய்யப்பட்டது. அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், தேர்தல்நடத்தும் அலுவலர் சந்திரசேகர்  மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை