×

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் பணம் திருடியவர் சிக்கினார்

மயிலாடுதுறை, அக்.15: மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் பணம் திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் பேருந்து நிலையத்தில் சீர்காழி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி திலகவதி(28) நின்று கொண்டிருந்தார், அந்த நேரத்தில் அவரது பையில் வைத்திருந்த பர்சை எடுத்து அதிலிருந்த ரூ.500 பணத்தை எடுத்த போது திலகவதி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து குத்தாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை விசாரித்ததில் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கலைஞர் நகர் சீனிவாசன் (30) என்பது தெரியவந்தது.  அவரிடமிருந்த ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்து காவலில் அடைத்தனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி