பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்

திட்டக்குடி, அக். 15: திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் செந்தில்வேலன், துணை தாசில்தார்கள் ஜெயச்சந்திரன், எழில்வளவன், வட்ட வழங்கல் அலுவலர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவின்குமார் கலந்துகொண்டு பேசும்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் அலுவலகத்தில் காத்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கோவிந்தசாமி என்பவர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ள தனது மகளுக்கு கல்வி உதவித்தொகை பெற சான்றிதழ் வேண்டும் என முறையிட்டார். சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து உடனே கையொப்பமிட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்தார். பின்னர் திட்டக்குடியில் இயங்கும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிக்கு சென்று அங்கு உணவு முறையாக வழங்கப்படுகிறதா, மாணவர்களுக்கு நடைமுறையில் பிரசனைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டரிந்தார். மேலும் மாணவர்களிடம் படிப்பு மட்டுமே வாழ்வின் ஆதாரமாக அமையும் என அறிவுரை வழங்கினார்.


Tags : investigation ,petitions ,
× RELATED நங்கநல்லூரில் உள்ள கோயில்களுக்கு...