×

கள்ளச்சாராயம் விற்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகை, அக்.15: சீர்காழி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீதும் அவர்களுக்கு உடைந்தையாக இருக்கும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். சீர்காழி அருகே அண்ணன்கோவில் மேலச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிகுழுவினர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமமான மேலச்சாலை, தென்னங்குடி ஆகியவை சீர்காழி தாலுகாவில் உள்ளது. இந்த கிராமத்தை சின்ன காரைக்கால் என்று மறைமுகமாக அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் எங்கள் சிராமத்தைச் சேர்ந்த சிலர் காரைக்காலில் இருந்து கள்ளசாராயத்தை போலீசார் உதவியுடன் கடத்தி வந்து பாக்கெட் போட்டு விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

விவசாய பணி செய்பவர்கள் காலையிலேயே குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். கள்ளச்சாராயம் கடத்துவோர்கள் மீது வைத்தீஸ்வரன் கோயில் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் பெயரளவிற்கு மட்டும் வழக்கு பதிவு செய்கின்றனர். மற்றபடி கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களிடம் போலீசார் மாமூல் பெற்று கொள்கின்றனர். எனவே இது போன்ற காவல் துறையினரை இடம் மாற்றம் செய்ய வேண்டும். கள்ளசாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மீது கருணை கொண்டு கள்ளசாராயம் விற்பனை செய்பவர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : counterfeit sellers ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை...