×

என்எல்சி அனல்மின் நிலையத்துக்கு அனுப்பிய டேங்கர் லாரியில் பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக தண்ணீர் கலந்து மோசடி

நெய்வேலி, அக். 15: நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்துக்கு டேங்கர் லாரியில் அனுப்பிய பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட டிரைவர், கிளீனர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் புதிய அனல்மின் நிலையமான என்என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இங்கு நிலக்கரிக்கு பதிலாக பர்னஸ் ஆயில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து என்எல்சிக்கு பர்னஸ் ஆயில் டேங்கர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் என்எல்சி அனல்மின் நிலையத்துக்கு வந்த டேங்கர் லாரியை மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது 10 ஆயிரம் லிட்டர் பர்னஸ் ஆயிலுக்கு பதில் தண்ணீர் ஊற்றி டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து என்எல்சி பொறியாளர் சவுந்தரராஜன் நெய்வேலி ெதர்மல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து இந்த மோசடியில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த முத்து மகன் தமிழ்ச்செல்வன் (36), கிளீனர் திருவண்ணாமலையை சேர்ந்த விமல்ராஜ் மகன் அஜித்குமார் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பர்னஸ் ஆயில் அனுப்பும் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : NLC Analmin Station ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி