×

தூத்துக்குடியில் செல்போன் பறித்த 3 பேர் கைது

தூத்துக்குடி, அக். 15: தூத்துக்குடியில் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி  கேவிகே நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் (43). தனியார் நிறுவன ஊழியரான இவர்   நேற்று முன்தினம் தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே பைக்கில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3பேர் மறித்து  அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.  புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி இன்னாசியார்புரத்தைச் சேர்ந்த இருதயராஜ் மகன்  அந்தோணி ஜூடு (29), தெற்கு புதுத் தெருவைச் சேர்ந்த லூர்தீஸ் மகன் முகம்மது  ரபீக் (36), ஜெயலானி தெருவைச் சேர்ந்த செய்யதலி மகன் முகைதீன் அப்துல்  காதர் (22) ஆகிய 3 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைதுசெய்த போலீசார்,  அவர்களிடம் இருந்து  செல்போனை மீட்டனர்.


Tags : persons ,Thoothukudi ,
× RELATED களக்காடு அருகே ஊருக்குள் உலாவும்...