×

பேய்க்குளத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவருக்கு வலை

சாத்தான்குளம், அக். 15: பேய்க்குளத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய  மற்றொரு ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள பிராண்டார்குளம் வேதக்கோயில் தெருவை சேர்ந்தவர் மரியதுரைராஜ் மகன் யாக்கோப் (42). இவர் பேய்க்குளம் பஜாரில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.  இதேபோல் புளியங்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் சக்திவேல் ஆள்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோவை  ஓட்டிச்சென்றபோது யாக்கோபு மீது ஆட்டோ மோதியதாம். இதனால் அவர்  சக்திவேலை கண்டித்தார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல்,  யாக்கோப்  கீழ் உதட்டை கடித்து காயப்படுத்தினார். காயமடைந்த யாக்கோப் சாத்தான்குளம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவர் சக்திவேலை தேடி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : auto driver ,ghost pool ,
× RELATED விஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை