×

முக்காணியில் மாசுபட்ட குடிநீர் விநியோகம்

தூத்துக்குடி, அக். 15: முக்காணி, வாழவல்லான் பகுதிகளில் மாசுபட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கலெக்டரிடம் குற்றம்சாட்டிய கிராம மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து வைகுண்டம்  ஒன்றியம், முக்காணி கிராம மக்கள் திமுக செயலாளர் மூக்காண்டி என்ற நட்டார் தலைமையில் திரண்டுவந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: முக்காணி  கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள்  கிராமத்திற்கு வாழவல்லான் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 1 மாதமாத சுத்திகரிக்கப்படாமல் கலங்கலாக மாசுபட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நிறம் மாறி வரும்  இந்த தண்ணீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் உண்டாகிறது. எனவே, இதுவிஷயத்தில் குடிநீர் வடிகால்  வாரியம் குடிநீரை முறையாக சுத்திகரித்து வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இதே போல் ஏரல் பகுதியில் உள்ள கழிவுநீரோடைகளை ஆற்றில் கலக்காமல் தடுத்துநிறுத்தி பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஏரல் அருகே வாழவல்லான் பஞ்சாயத்து பூஞ்சோலை தெருவில் ஊருக்குள் புகும்கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏரல் அடுத்த வாழவல்லான்  பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூஞ்சோலை தெருவில் அமைக்கப்பட்ட கழிவுநீரோடையானது முறையான பராமரிப்பின்றி தூர்ந்துப் போனது. இதனால் அதில் நிரம்பும் குப்பைகள், கழிவுகளால்  கழிவுநீரானது சீராக செல்ல வழியின்றி தெருக்களுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் நோய்  பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, கழிவு நீரோடையை  விரைந்து சீரமைத்துதரவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணும்...