×

விழிப்புணர்வு பேரணியில் மனநல மருத்துவர் தகவல் கூட்டுறவு பால் சங்க ஓய்வூதியர்களுக்கு ரூ.4ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்

மன்னார்குடி, அக்.15; ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுவதை போல் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கும் மாதம்தோறும் ரூ.4ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும், ஆவின் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் இலவச பால் வழங்க வேண்டும். பணிஓய்வு பெற்றவர்களின் வாரிசுகளுக்கு சங்கங்களில் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவருக்கும் வருடாந்திர பஞ்சப்படி உயர்வு வழங்கிட வேண்டும், ஓய்வூதியம் பெறுவோர் மறைவுக்கு பின் வழங்கப்படும் இழப்பீடு தொகையை ரூ 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கிய பேரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு சங்கத்தின் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.

பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்தானகிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்தார். பின்னர் பேரணியாக வந்த ஓய்வூதியர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக் கோட்டி வசம் அளித்தனர்.ஆர்டிஓவிடம் மனு இந்திய அளவில் தற்கொலை செய்பவர்கள்  எண்ணிக்கையில் முறையே தமிழ்நாடு,  கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளதாக ஆய்வுகள்கூறுகின்றன.


Tags : awareness rally ,psychiatrist ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி