×

அகற்ற மக்கள் கோரிக்கை முத்துப்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ெதருமுனை பிரசாரம்

முத்துப்ேபட்டை,அக்.15: முத்துப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நேற்று எடையூர் கடைதெருவில் துவங்கி பாண்டி கடைத்தெரு, இடும்பாவனம், தில்லைவிளாகம், ஜாம்புவானோடை தர்கா, முத்துப்பேட்டை பழைய பேரூந்து நிலையம், ஆசாத்நகர் நாச்சிக்குளம் உட்பட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்திஉள்ளிட்ே–்டார் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பேசினர். இதில் இரு கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


Tags : campaign ,Communist Parties ,
× RELATED சைதாப்பேட்டை காய்ச்சல் முகாமில்...