×

அருப்புக்கோட்டையில் பரபரப்பு மாவட்ட விளையாட்டு அரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டி

விருதுநகர், அக். 10: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் அக்.16 காலை 8 மணியளவில் மாதந்திர விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில், தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெறும். 14 வயதிற்கு மேல் 19 வயதிற்கு கீழ் உள்ள பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம். பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மட்டும் கலந்து கொள்ள முடியும். தனி நபர் ஒரு போட்டியில் மட்டும் கலந்து
கொள்ளலாம். குழுப் போட்டியில் ஒரு பள்ளியில் இருந்து ஒரு அணி மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். தடகளம், நீச்சல் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். குழுப்போட்டியில் முதல் 2 இடங்கள் பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்வோர் தலைமையாசிரியர், முதல்வரிடம் ஆளறி சான்றிதழ் (போனபைட் சான்றிதழ்) பெற்று வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ள வருவோருக்கு பயணப்படி, தினப்படி எதுவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Monthly Sports Competition ,Parappukkottai Area ,
× RELATED கிருஷ்ணகிரியில் மாதாந்திர விளையாட்டு போட்டி