×

விருதுநகரில் மணல் மேவி கிடக்கும் மேம்பாலச் சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

விருதுநகர், அக். 10: விருதுநகரில் மணல் மேவும் மேம்பாலச் சாலைகளால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு, அருப்புக்கோட்டை ரோடுகளில் மேம்பாலங்களும், காமராஜர் பைபாஸ் ரோட்டில் தரைப்பாலமும் உள்ளது. இந்த பாலங்களை விருதுநகர் நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரில் மேம்பாலங்கள், தரைப்பாலங்களில் சேரும் மணல், குப்பைகள் நகராட்சி பணியாளர்கள் மூலம் வாரந்தோறும் அகற்றப்பட்டு வந்தன. ஆனால், தற்போது மேம்பாலங்கள், தரைப்பாலங்களில் சேரும் மணல், குப்பைகளை அகற்றுவதில்லை. மேம்பாலம், தரைப்பாலங்களில் மணல், குப்பை சேர்வதால் டூவீலர்களில் வருவோர் சறுக்கி விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். கடந்த வாரம் ராமமூர்த்தி ரோடு மேம்பாலத்தில் டூவீலரில் வந்த நபர், சறுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. எனவே, விருதுநகர் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ராமமூர்த்தி ரோடு, அருப்புக்கோட்டை ரோடு மேம்பாலங்களில் இருபுறமும் மேவிக் கிடக்கும் மணல், குப்பைகளை வாரம் ஒரு முறை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Motorists ,highway roads ,Virudhunagar ,
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...