×

அரசு மருத்துவமனைக்கு மின்சலவை இயந்திரம் ராம்கோ நிறுவனம் வழங்கியது

விருதுநகர், அக். 10: விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ராம்கோ நிறுவனம் சார்பில், ரூ.4 லட்சம் மதிப்பிலான மின்சார சலவை இயந்திரம் நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ராம்கோ சிமெண்ட் ஆலையின் மூத்த தலைவர் உற்பத்தி ராமலிங்கம், மூத்த பொதுமேலாளர் நிர்வாகம் மணிகண்டன் ஆகியோர், சலவை இயந்திரத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இதில், மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் மனோகரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன், உறைவிட மருத்துவ அதிகாரி அரவிந்தபாபு, முதுநிலை குடிமை மருத்துவர் டாக்டர் அன்புவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ramco ,Government Hospital ,
× RELATED திருப்பூர் அரசு மருத்துவமனையில்...