×

விவசாயம் செழிக்க அய்யனார் கோயில் புரவி எடுப்பு

சாயல்குடி, அக். 10:  முதுகுளத்தூர் அருகே மேலபணைக்குளம் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா கொண்டாடப்பட்டது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், பல தரப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாகவும், கிராம மக்கள் நேர்த்திக் கடன் செலுத்த குதிரை மற்றும் தவளும் பிள்ளையை ஊர்வலமாக சுமந்து வரும் புரவி எடுப்பு மேலபணைக்குளம் கிராமத்தில் நடந்தது. அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவையொட்டி தயார் செய்யப்பட்ட மண் குதிரை, தவழும்பிள்ளை, கருப்பசாமி உள்ளிட்ட சாமி உருவ மண் பொம்மைகளை சிறப்பு வழிபாடு செய்து, பொதுமக்கள் தலையில் வைத்து சுமந்து மேலபண்ணைக்குளம் கிராமத்தின் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பிறகு கிராமத்திற்கு வெளியே காவல் தெய்வமாக விளங்கக் கூடிய அய்யனார் கோயிலில் மேளதாளங்கள், வாணவேடிக்கையுடன் குதிரை மற்றும் சாமி உருவபொம்மைகள் வைக்கப்பட்டது. அவைகளுக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, கிடா, சேவல் பலியிடுதல், சாமி ஆடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. பெண்கள் குடும்பத்தாருடன் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags : Ayyanar Kovil ,pioneer ,