×

புதிய ரேசன் கடை திறப்பு

சாயல்குடி, அக்.10:  முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்காலில் புதிய ரேசன் கடை நேற்று திறக்கப்பட்டது. முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்கால், காலனி, கோகுல்நகர் உள்ளிட்ட கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ரேசன் கடை இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து முதுகுளத்தூர் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியிடம் புதிய ரேசன் கடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து வெண்ணீர் வாய்க்காலில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை நேற்று எம்.எல்.ஏ மலேசியா பாண்டியன் திறந்து வைத்தார்.

Tags : ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா