×

கமுதி கோயிலில் மகர நோன்பு விழா

கமுதி, அக்.10:  கமுதி முத்துமாரியம்மன் கோவில் மகர நோன்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவில் கொலு வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடைபெற்றது. சரஸ்வதி பூஜை விழாவும் கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு விஜயதசமியை முன்னிட்டு, மகரநோன்பு உற்சவ விழா நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமி ஊர்வலமாக வந்து, மகரநோன்பு திடலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா வாணவேடிக்கை, சிலம்பாட்டம், மேளதாளங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

Tags : Makar ,fasting ceremony ,Kamudi Temple ,
× RELATED சீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..!