×

மேலூரில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இல்லை

மேலூர், அக். 10: மேலூர் நகரில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும், தினசரி வார்டு வாரியாக டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மருத்துவர்
கூறினார்.மேலூர் காஞ்சிவனம் திடலில் வெள்ளலூர் வட்டார மருத்துவ அலுவலர் சிவநேசன் தலைமையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு முகாம் நேற்று நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் பொறுப்பு ரத்தினவேலு, நகராட்சி சுகாதார அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட மலேரியா ஆபிசர் விக்டர் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள்,  கொசு ஒழிப்பு தற்காலிக பணியாளர்கள் என 40 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு குளோரினேசன், புகை அடிப்பது, கொசு புழு ஒழிப்பு போன்றவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உத்தரவிடப்பட்டது. பின்னர் உடனடியாக காஞ்சிவனம் திடல், எஸ்எஸ்வி சாலா பகுதியில் டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மேலூர் பஸ்ஸ்டாண்ட் முன்பு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பின்னர் மருத்துவ அலுவலர் சிவநேசன் கூறியதாவது, ‘மேலூரில் உள்ள 27 வார்டுகளிலும் தினசரி டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலூர் நகரில் இதுவரை டெங்கு அறிகுறி தென்படவில்லை. பொதுமக்களும் தங்கள் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ளவும், தண்ணீர் தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும்’
என்றார்.

Tags : Melur ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!