×

பழநி நகராட்சியில் 60 மெட்ரிக் டன் ஆயுதபூஜை குப்பைகள் அகற்றம்

பழநி, அக். 10: பழநியில் 60 மெட்ரிக் டன் அளவிலான ஆயுதபூஜை குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டுள்ளன. பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 256 தெருக்கள் உள்ளன. நகராட்சியில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 70 ஆயிரத்து 456 ஆகும். சுகாதாரப்பணிகளுக்காக பழநி நகராட்சி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவிற்கு 1 துப்புரவு ஆய்வாளர், இரு துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் வீதம் 6 பிரிவுகளுக்கு 139 நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கும் 105 தனியார் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களும் என 244 துப்புரவு பணியாளர்களைக் கொண்டு நகரில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை காலங்களில் வெளியிலிருந்து வரும் வாழை மரம், மா இழை மற்றும் பூஜைகளுக்காக மக்கள் சுத்தம் செய்து போடும் குப்பைகள் என நகர் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று சுமார் 60 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகின்றன.இனிவரும் காலங்களில் குப்பைகளை வெளியே கொட்டாமல், குப்பை தொட்டிகளில் மட்டும் கொட்ட வேண்டுமென்றும், மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : municipality ,Palani ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை