தாம்பராஸ் நிர்வாகிகள் நீக்கம்

பழநி, அக். 10: பழநியில் தமிழ்நாடு பிரமாணர் சங்க (தாம்பராஸ்) அவசரக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரமேஷ்குமார் சர்மா முன்னிலை வகித்தார். கடந்த ஜூன் மாதம் பழநியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில நாராயணன் தலைமையின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவும் கலைக்கப்பட்டது. இந்நிலையில் நாராயணன் மற்றும் பொதுச்செயலாளர் டிஎன்ஜி சங்கரன் ஆகியோர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்தும் விதமாகவும், சங்க நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும் உள்ளதால் விதி எண் 240 மற்றும் 243ன் கீழ் இருவரையும் சங்கத்தில் இருந்து நீக்கவும், அவர்களின் மீதான புகார்களை குழு அமைத்து விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags : executives ,Tambaras ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பமனு தரலாம்