×

தேசிய கருத்தரங்கு

கொடைக்கானல், அக். 10: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கு நடந்தது.கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வைதேகி விஜயகுமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கணினி துறை சார்பில் நடந்த இந்த தேசிய கருத்தரங்கிற்கு கணினி துறை தலைவர் பேராசிரியர் புஷ்பராணி முகவுரை கொடுத்து வரவேற்றார். கருத்தரங்கில் ஆந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் சிபி சக்கரவர்த்தி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சங்கீதா ஆகியோர் தகவல் தொழில்நுட்ப காலத்தில் தகவல்களை பரிமாறும்போது பாதுகாப்பு முறைகள் பற்றி பேசினர். இந்த கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியர் இந்திராகாந்தி நன்றி கூறினார்.


Tags : National Seminar ,
× RELATED மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் முதியோர்கள் குறித்த தேசிய கருத்தரங்கம்