×

செவ்வாய்பேட்டை பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா நிறைவு

சேலம், அக்.10:  சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் பிரமோற்சவ விழா நிறைவு நாளையொட்டி திருப்பாவாடை உற்சவம் நடந்தது.
சேலம் செவ்வாய்பேட்டை தெய்வநாயகம் தெருவில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வேங்கடாசலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு கடந்த 29ம் தேதி பிரமோற்சவ விழா தொடங்கியது. நேற்று (9ம்தேதி) விழா நிறைவு பெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு திருமஞ்சனம், ஹோமங்கள், துவாதச ஆராதனைகள், மதியம் 12 மணிக்கு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. மாலை 6 மணிக்கு புஷ்பயாகம், இரவு 7 மணிக்கு  சத்தாபரணம், 9 மணிக்கு கொடி இறக்குதல் நடந்தது. தொடர்ந்து சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags : Celebration of Ceremony ,Perumal Temple ,
× RELATED காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் ரத்து