×

ராசிபுரத்தில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

ராசிபுரம், அக்.10: ராசிபுரத்தில் திமுக சார்பில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திசெல்வன், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரங்கசாமி, மாவட்ட மாணவரணி மோகன்தாஸ், நகர இளைஞரணி கார்த்திக்,  முன்னாள் கவுன்சிலர் ரவி, அழகரசு, வழக்கறிஞர் கீதாலட்சுமி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Rasipuram ,DMK ,
× RELATED திருச்சி மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை நிறுத்தம்