×

விவேகானந்தா கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

திருச்செங்கோடு,  அக். 10:
திருச்செங்கோடு அடுத்த எளையாம்பாளையம் விவேகானந்தா கல்வி  குழுமத்தின்  ரபீந்திரநாத் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரி  மற்றும் விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி சார்பில், “பேரிடர் மேலாண்மை மற்றும்  முதலுதவி” பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்வி  நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் கருணாநிதி  தலைமை வகித்தார். ரபீந்திரநாத் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரி  முதல்வர்   பரிமளா வரவேற்றார். விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி முதல்வர்   ஆரோக்கியசாமி வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினராக ராசிபுரம்  திருவள்ளுவர் அரசு கல்லூரி பொருளியல் துறைத்தலைவர் பேராசிரியர்  லோகநாதன்  பங்கேற்று ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மை மற்றும்  முதலுதவி அளிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார். மேலும் குறும்படம்  மூலமாகவும், மாதிரி செயல்முறை மூலமும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பயிற்சி  ஆசிரிய மாணவிகள், பல்வேறு முதலுதவி அளிக்கும் வழிமுறைகளின் மாதிரிகளை  நிகழ்த்திக்காட்டினர். இந்நிகழ்ச்சியை பேராசிரியர்கள் ஆனந்தி, புஷ்பா  ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள் கலாமணி, கலைச்செல்வன், காயத்ரி,  கோகிலா, பொன்னுசாமி, முருகேசன், மணிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Disaster Management Awareness Camp ,Vivekananda College ,
× RELATED விவேகானந்தா கல்லூரியில் கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்