×

திருச்செங்கோட்டில் 12ம் தேதி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, அக்.10: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு  திருச்செங்கோட்டில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகிக்கிறார்.  இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, உள்ளாட்சி வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள்  குறித்து ஆலோசனை நடைபெறும். எனவே, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Western District ,DMK ,Executive Committee Meeting ,Thiruchengode ,
× RELATED திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: காணொலியில் நடந்தது