×

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கிராம பகுதியில் நிலவேம்பு குடிநீர்

ஓசூர்,அக்.10: ஓசூர் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், அனைத்து கிராம பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி, எழில்நகர், பாகூர், கோவிந்த அக்ரகாரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிறுப்புகள் உள்ளது. விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்கள் நிறைந்து காணப்படும் இப்பகுதியில், கடந்த சில நாட்களாக மக்கள் காய்ச்சல் பாதிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தும் வகையிலும் கிராமங்கள் தோறும் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேகேப்பள்ளி கிராமத்தில் நேற்று சுகாதார துறையினர் அப்பகுதி மக்களின் குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டிகளை மூடிவைக்க வேண்டும். பழைய டயர், பாட்டில்கள், உரல்கள் உள்ளிட்டவைகளில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்தாப்பேகம், பாலாஜி கிராம ஊராட்சிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் என சுகாதார துறையினர் தெரிவித்தனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், பேகேப்பள்ளி பஞ்சாயத்து செயலர் முருகேஷ்ரெட்டி, சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : areas ,
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்