×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

தர்மபுரி, அக்.10: தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்த டி.ஆண்டியூர்  பிரிவு ரோட்டில் கோட்டப்பட்டி போலீசார் நேற்று மாலை வாகன தணிக்கையில்  ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தினர்.  போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பினார். இதையடுத்து  லாரியை சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. பின்னர் மணலுடன்  லாரியை போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்...