×

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

போச்சம்பள்ளி, அக்.10: தேவீர அள்ளி அரசு பள்ளியில், முப்பெறும் விழா நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒராண்டு நிறைவு விழா, முதல் ஆண்டில் 100 சதவித தேர்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்து தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் அண்ணாமலை, முருகேசன், கூட்டுறவு சங்க தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியப்பன் வரவேற்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஆசிரியர்களை பாராட்டி பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, வேடியப்பன், மாவட்ட கல்வி ஆய்வாளர் ஜெயராமன் உட்பட கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.  முருகேசன், சம்பத், கதிர்வேல், காசி, முருகையன், ரமேஷ், மாணிக்கம் ரேணுகா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.

Tags : Government School ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன்...