×

வேலைக்கு அனுப்பாததால் இளம்பெண் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி, அக்.10: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கௌரப்பன் (30). இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு பூர்ணிமா (22) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. பூர்ணிமா அருகே உள்ள டைலரிங் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக பூர்ணிமாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கௌரப்பன் கூறி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பூர்ணிமா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கௌரப்பன் மாலை வீட்டுக்கு வந்தபோது கதவை திறக்காததால் சந்தேகமடைந்து, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது பூர்ணிமா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், குடும்ப தகராறில் மனமுடைந்து காணப்பட்ட பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தொடர்ந்து திருமணமாகி 4 வருடங்கள் ஆவதால், அரூர் ஆர்டிஓ புண்ணியகோடி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : suicide ,
× RELATED இளம்பெண் தற்கொலை