×

பாஜ சார்பில் விழிப்புணர்வு பாத யாத்திரை

கிருஷ்ணகிரி, அக்.10: காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடந்தது. இந்த பாதயாத்திரையை முன்னாள் எம்பி நரசிம்மன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பாதயாத்திரை காந்தி சாலை, 5 ரோடு ரவுண்டானா, காலனி தெரு, ராயப்ப முதலி தெரு, தர்மராஜா கோவில் தெரு வழியாக மீண்டும் பழையபேட்டை காந்தி சிலையை சென்றடைந்தது.

இதில் பாஜ அகில இந்திய சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் முனவரி பேகம், கோட்டப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், முன்னாள் நகர தலைவர் முருகேசன், நகர துணைத் தலைவர் ரமேஷ், ஆனந்தகுமார் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் ஒரப்பம் கிராமத்தில் உள்ள சிவகாமியம்மாள் கல்லூரி மாணவிகள் என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Baja ,
× RELATED திமுக சார்பாக புதிய வாக்காளர் சேர்க்கும் பணி