×

பாலக்கோடு அருகே நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

பாலக்கோடு, அக்.10: பாலக்கோடு அருகே, பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளி ஊராட்சி ஜோகிர்கொட்டாயில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 2001ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், குடிநீர் தொட்டி பழுதடைந்ததால், குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக, கொலாசனஅள்ளி, நல்லாம்பட்டி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு, தண்ணீர் தேடி மக்கள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்து காணப்படும் இந்த நீர்தேக்க தொட்டியை சீரமைத்து, மீண்டும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palakkad ,
× RELATED தென்மேற்கு பருவ மழையால் கிடைக்கும்...