×

திருப்பராய்துறை பகுதியில் 2 முதலைகள் சிக்கின

திருச்சி, அக்.10: திருப்பராய்துறை பகுதியில் 2 முதலைகள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறை பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரத்தை வைத்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது அந்த பகுதியில் உள்ள புதரில் பதுங்கி இருந்த 2 முதலைகள் வெளியே வந்தன. பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் பதுங்கிகொண்டன. வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி அந்த முதலைகளை பிடித்து சென்றனர்.

Tags : area ,Tiruppaikulam ,
× RELATED பணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம்:...