×

ரூ.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி,அக்.10: அவிநாசி ஒன்றியத்தில் 90 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1500 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு செய்துள்ளனர். நிலக்கடலைப்பயிர் அறுவடை காலம் ஆனதால், சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற  ஏலத்தில், மொத்தம் 1600 நிலக்கடலை மூட்டைகளை ஏலத்திற்காக கொண்டு வந்திருந்தன. குவிண்டாலுக்கு நிலக்கடலை முதல் ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.7180 முதல் ரூ.7350 வரையிலும்,  குவிண்டாலுக்கு இரண்டாவது ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.6800 முதல் ரூ.6890 வரையிலும்,  பச்சை ரக நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ. 6100 முதல் ரூ.6240 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 30 லட்சத்துக்கு  ஏலம் நடைபெற்றது.

Tags : Auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்