×

பல்லடம் சுற்றுவட்டாரத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

திருப்பூர்,அக்.10: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் பொங்கலூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் மேம்படுத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கணபதிபாளையம் ஊராட்சியில் சுமார் 3.21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  பொன்னே முத்துக்கவுண்டன்புதூர் குட்டை, பனிக்கம்பட்டி ஊராட்சி வேலப்ப கவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள சுமார் 3.18 ஏக்கர் பரப்பளவிலான செரியான் தோட்டத்துக்குட்டை, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாவிபாளையம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மந்திரிபாளையம் குட்டை, வடமலைபாளையம் ஊராட்சியில் சுமார் 2.45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பொறையான் குட்டை மற்றும் சுமார் 1.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புத்தரச்சல் குட்டை ஆகிய நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியினையும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் கள்ளிபாளையம் ஊராட்சி புத்தரச்சல் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் மற்றும் வே.வடமலையபாளையம் ஊராட்சி வேலப்பகவுண்டன்பாளையத்தில் ரூ.30.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த தடுப்பணையினையும் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி திட்ட அலுவலர் கிரி, வட்டாட்சியர் சாந்தி, பாலமுருகன், பானுப்பிரியா உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags : Collector ,Inspection of Palladam Circuit Development Project ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை...