×

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற பனியன் தொழிலாளிக்கு தர்ம அடி

திருப்பூர்,அக்.10:திருப்பூர், இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீடு நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். அந்த பெண்ணை பைக்கில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் பின்தொடர்ந்தார்.  இடுவம்பாளையம் மின் வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென அந்த பெண்ணைக் கீழே தள்ளி நகையைப் பறிக்கவும், பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட அந்த பெண் அவரைப் பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார். அதற்குள் சத்தம் கேட்டு வந்த பொதுமக்களும் சேர்ந்து அந்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கி வீரபாண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த மணிராஜ் (24) என்பதும் திருப்பூரில் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Banyan ,
× RELATED மனைவியை மண் வெட்டியால் தாக்கிய தொழிலாளி கைது