×

திருக்காட்டுப்பள்ளி அருகே செல்போன் டவரில் கேபிள், பேட்டரி திருட முயன்ற 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி, அக். 10: திருக்காட்டுப்பள்ளி அருகே செல்போன் டவரில் கேபிள் மற்றும் பேட்டரியை திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருக்காட்டுப்பள்ளி அடுத்த நேமம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மயானத்தின் அருகில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இதில் நேற்று காலை 2 பேர் கேபிள் மற்றும் பேட்டரியை திருட முயன்றனர். இதை பார்த்து அப்பகுதி மக்கள் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசியதில் கேபிள் மற்றும் பேட்டரியை திருட முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மேற்கொண்ட விசாரணையில், மேலதிருப்பூந்துருத்தி வடக்கு தெரு செல்வம் மகன் ராஜ்குமார் (23), உமையவள் ஆற்காடு கனக்கனார்குடி பழனிச்சாமி மகன் கீர்த்தி (26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை நிஷா இன்டஸ்டிரியல் சர்விசஸ் மேலாளர் மதிவாணன் (49) புகார் செய்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

Tags : persons ,cell tower ,
× RELATED காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்