பாபநாசம் அருகே இளம்பெண் மாயம்

பாபநாசம், அக். 10: பாபநாசம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பாபநாசம் அடுத்த கோபுராஜபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் பவித்ரா (16). கடந்த 26ம் தேதி வீட்டின் கொல்லைப்புறம் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பவித்ரா கிடைக்கவில்லை. இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் செய்தார்.பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Papanasam ,
× RELATED இளம்பெண் மாயம்