×

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம் நாளை நடக்கிறது

பெரம்பலூர், அக்.10: பெரம்பலூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் நாளை (11ம் தேதி) சிறப்புத் திட்ட முகாம் கள் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (11ம்தேதி) சிறப்புத் திட்ட முகாம் நடைபெறுகிறது. அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக தமிழக அரசின் சார்பாக சிறப்புத் திட்ட முகாம் செய ல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர் கள் பொது மக்களை தேடிச் சென்று அவர்களின் குறை களைத் தீர்க்கும் வகையில், திட்டமுகாம்கள் நடத்தப்படுகிறது.

இந்த முகாம்களில் பொது மக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டை கள் பெற பதிவுகள் செய் தல், குடும்ப அட்டைகளில் மேற் கொள்ள வேண்டிய திருத் தங்கள், பிறப்பு இற ப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான் றிதழ்கள், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட் டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள், முதி யோர் உதவித்தொகை உள் ளிட்ட உதவித்தொகை கோ ரும் மனுக்கள், உழவர் பாது காப்புத் திட்டத்தின் உதவிக ள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதல மைச்சரி ன் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், துயர் துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக் கள் மீது ஆணைகள் பிறப் பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்ய ப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன.

உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன்படி நாளை (11ம்தேதி) பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவில் செங்குணம் கிராமத்திலும், குன்னம் தாலுகாவில் வடக்கலூர் கிராமத்திலும், வேப்பந்தட்டை தாலுகாவில் வெங்கனூர் கிராமத்திலும், ஆலத்தூர் தாலுகாவில் மாவிலங்கை கிராமத்திலும் என 4 கிராமங்களில் சிறப்புத் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : project camp ,district ,Perambalur ,villages ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி