×

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், அக். 10: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சூர்யா (19). டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஊரிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் கடைவீதிக்கு தேவாங்கமுதலியார் தெரு வழியாக வந்தார்.

அப்போது சாலையில் சூர்யா பைக்கில் ஹாரன் அடித்துள்ளார். அவ்வழியே இவருக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சார்ந்த கலைமணி (23), அரவிந்த் (23) ஆகியோர் ஹாரன் சப்தம் கேட்டு எரிச்சலாகி ஆத்திரமடைந்து கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் சூர்யாவை குத்தி தாக்கினர்.இதில் காயமடைந்த சூர்யா, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சூர்யா அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிந்து கலைமணி, அரவிந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை