×

அமெரிக்க படைப்புழுவிலிருந்து மக்காச்சோளம் பயிர்களை பாதுகாக்க ஆளில்லா குட்டி விமானம் மூலம் சோதனை முறையில் மருந்து தெளிப்பு தமிழ்நாடு வேளாண்துறை, வேளாண்.பல்கலை கூட்டாய்வு

பெரம்பலூர், அக்.10: பெரம்பலூர் மாவட்டத்தில் 2ம்ஆண்டாக அமெரிக்க படைப்புழு தாக்குதலால் சேதம் அதிக ரிப்பு எதிரொலியாக தமிழ்நாடு வேளாண்துறை, வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் ஆளில்லா குட்டி விமானத் தைக் கொண்டு, ஏரியல் ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பதற்கான சோத னை ஓட்டத்திற்காக, தமி ழ்நாடு வேளாண்மைத்து றையும், தமிழ்நாடு வேளா ண் பல்கலைக்கழகமும் 10 ஏக்கர் பரப்பளவில் கூட்டா ய்வு நடத்தியது. அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 15 ஆண்டு களாக ஆளில்லா விமானம் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் உளவு பார்த்தல் மட்டுமன்றி, வெள்ள பாதிப்பு, வெள்ளத் தடுப்பு, பேரிடர் கால மருந்துபொருட்கள் உணவு பொருட்களை மருத்துவ உபகரணங்களைக் கொண்டுபோய் சேர்ப்பது போன்ற பேரிடர்மீட்பு பணி களுக்கும் உதவி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் வேளாண் உற்பத்தித் துறை ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோளின்பேரில், தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களில் கடந்த 2 ஆண்டுகளாகப் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்க படைப்புழு தாக்குதலால், இந்திய அளவில் தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக கருதி, மக்காச்சோளப் பயிர்களில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பூச்சிக் கொல்லி மருந்துக ளைத்தெளித்து, படைப்புழு தாக்குதல்களில் இருந்து பயிர்களைக் காப்பதற்காக சோதனை ஓட்டத்தை நடத தும்படி கோரப்பட்டுள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு வேளாண்மைத்துறையுடன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும், அண் ணா பல்கலைக் கழகமும் இணைந்து தமிழக அளவில் நேற்று முதன் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆளில்லா குட்டி விமானங்களைக் கொண்டு, ‘அன் மேன் ஸ்பிரேயர்’ அல்லது ‘ஏரியல் ஸ்பிரேயர்’ எனப்படும் முறையில், இண்டியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச் சுரல் ரிசர்ச்சென்டர், பயிர்க ளில் முதல்கட்டமாக தெளி க்கப் பரிந்துரைத்துள்ள வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் அசாடிராக்டிங் மருந்தை தெளிக்கும்சோதனை ஓட்டத்தை நடத்தி கூட்டாய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக நேற்று கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சாத்தையா, பேராசிரியர் முத்துகிருஷ்ணன், பெரம்பலூர் மாவ ட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கணே சன்,துணைஇயக்குநர் ராஜ சேகர், வேளாண்மை உதவி இயக்குநர் கீதா, திருச்சி நவலூர் குட்டப்பட்டு தமிழ் நாடு வேளாண்மைக் கல்லூரியின் பூச்சியியல்து றை வல்லுநர் யசோதா, ரோவர் வேளாண் அறிவி யல் ஆராய்ச்சி மைய உழவியல் வல்லுநர் புனிதவதி ஆகியோரோடு, அண்ணா பல்கலைக் கழக வான் வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் வசந்தராஜ், மாதவன்,அருள், முத்து, ராமச்சந்திரன், தங்கராஜ் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் அருகே அருமடல் செல்லும் சாலையிலுள்ள 10 ஏக்கர் வயல் பரப்பில் சாகுபடி செய்யப் பட்டுள்ள மக்காச் சோள பயிர்களை மருந்துகளைத் தெளித்து சோதனை ஓட்டத்தை நடத்தினர்.

இதுகுறித்து கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் சாத்தையா தெரிவித்ததாவது: தமிழக அளவில் மக்காச் சோளம் அதிகம் சாகுபடி செய்யப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் பகுதியில் தேர்வு செய்யப்பட்ட 10 ஏக்கர் பரப்புகளில் குறிப்பிட்ட பரப்புகளில் ஏரியல் ஸ்பிரேயர் மூலமும், குறிப்பிட்ட பரப்புகளில் வழக்கமான பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பானை கொண்டும் மருந்து தெளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பரப்பில் எந்தவித மருந்தும் தெளிக்காமல் விட்டு வைத்து 3 மாதிரி பரப்புகளிலும் படைப்புழு தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து, அண்ணா பல்கலைக் கழக வான்வெளி ஆராய்ச்சிமைய விஞ்ஞானி வசந்தராஜ் தெரிவித்ததாவது: ஆளில்லா குட்டி விமானங்களைக் கொண்டு, ஏரியல் ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. சாதாரண ஹெலி ஸ்பிரேயர் பேட்டரி மூலம் இயக்கப்படுவதால் அரை மணிநேரம் மட்டுமே தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

ஆனால் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பெட்ரோலைப் பயன்படுத்தி, ஆன்போர்டு ஜெனரேட்ட ரில் தொடர்ந்து 4 மணி நேரத்திற்குப் பறந்தபடி மருந்தினைத் தெளிக்கலாம். குறிப்பாக ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 நிமிடத்தில் மருந்தடித்து விடலாம். மனிதவளம் பயன்படுத்தாமல் தெளிப்பதால் விஷம் தாக்குதல் பாதிப்பு ஏற்படாது. இதில் 20 லிட்டர் மருந்தினைத் தூக்கிக்கொண்டு பறந்த படிதெளிக்க வசதியுள்ளது. மேலும் மக்காச் சோள பயிர்த் தோகையை காற்றாடி விரியச் செய்வதால் ஊடுருவி மருந்தை புழு தாக்குகிற நடுத்தண்டுப் பகுதிக் கே கொண்டு சென்று சேர்க்கிறது. இந்த சோதனை ஓட்டம் நல்ல பலனை தந்தால் தமிழகமெங்கும் ஆளில்லா குட்டி விமானங்களைப் பயன்படுத்தி ஏரியல் ஸ்பிரேயர் முறையில் பூச்சிக்கொல்லி மருந்தினைத் தெளிக்க தமிழக அரசே ஏற்பாடு செய்யும் என தெரிவித்தார். இந்தக் கூட்டாய்வின்போதுஇணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Drug spray testing ,carriers ,brewery ,US ,
× RELATED சீனாவை அச்சுறுத்தும் அமெரிக்க போர்...