×

கைதிகள் பணியாற்றும் சிறை பஜார் துவக்கம்

கோவை, அக்.10: கோைவ மத்திய சிறை நிர்வாகம் சார்பில் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் சிறை வளாகத்தில் சிறை பஜார் கடந்த 3 ஆண்டாக செயல்படுகிறது. இங்கே சிறை கைதிகள் தயாரிக்கும் ஆடைகள் குறைந்த விலையில் விற்பனையாகிறது. பஜாருக்கு அருகே சிறை நிர்வாகத்தின் கேண்டீன் உள்ளது. இங்கே டீ, காபி, வடை, போண்டா, பஜ்ஜி, மதியம் தக்காளி சாதம், தயிர்சாதம், லெமன் சாதம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. சிறை கைதிகளின் சலுகை கடையும் அருகே செயல்படுகிறது. சிறை வளாகத்தின் மற்றொரு கேட் பகுதியான ஏ.டி.டி காலனி சந்திப்பு பகுதியில் சிறை நிர்வாகத்தின் சார்பில் இரண்டாவது சிறை பஜார் அமைக்கப்பட்டது. நேற்று இந்த சிறை பஜாரை சிறை எஸ்.பி கிருஷ்ணராஜ் திறந்து வைத்தார். இதில் ஜெயிலர் குணசேகரன், துணை ஜெயிலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய சிறை பஜாரில் டீ, காபி, வடை, போண்டா, பஜ்ஜி வழங்கப்படும். காலை, மாலை நேரத்தில் இட்லி, தோசை தயாரித்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சிறை பஜாரில் 3 ஆயுள் தண்டனை கைதிகள் பணியாற்றுவார்கள். 2 சிறை வார்டன்கள் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சிறை பஜார் செயல்படும்.

Tags : Launch ,Prison Bazaar ,inmates ,
× RELATED புழல் சிறை தோட்டத்தில் கைதிகள்...