×

காமராஜ் நகர் பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி

கரூர், அக்.10: கரூர் நகராட்சி காமராஜ்நகர் 9வது குறுக்குத்தெருவில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனிடையே குடிநீர் குழாய்பதிப்பது, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலையை பறித்துபோட்டு பணிகள் நடைபெற்றன. அதன்பின்னர் புதிய தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அவ்வப்போது பெய்த மழையில் சாலையில் மேடுபள்ளமாக மாறிவிட்டது. வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் வேன்கள், இருசக்கர வாகனங்கள் இந்த தெருவில் அதிக அளவில் போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் தடுமாறியபடி செல்கின்றனர். உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kamraj Nagar ,area ,dump ,pit road ,
× RELATED குடியிருப்பு பகுதியை ஒட்டி வளர்ந்த சீத்தை முட்கள் அகற்றப்படுமா?